Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இது செல்போன் கடை அல்ல... எல்லாமே திருட்டு போன்கள்

சென்னையில் நடந்து செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2,240 செல்போன்களை திருடியவரையும், அதை வாங்கியவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த  கானாத்தூர், ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், நேற்று அந்த பகுதியில் நடந்து சென்றபோது கத்தியைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை மர்ம நபர் பறித்தார். இதுதொடர்பாக கானத்தூர் போலீஸில் பாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் பாலவாக்கத்தை சேர்ந்த பிரவீன்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பிரவீன்குமார், செல்போன் திருடன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரவீன்குமார், பழைய மகாபலிபுரம் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். திருடிய செல்போன்களை சித்தாலப்பாக்கம், மாம்பாக்கம் சாலையில் உள்ள அடகு கடையில் விற்றதாக தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்று அடகு கடையின் உரிமையாளர் அனுமன்ராமிடம் விசாரித்தோம். அப்போது அங்கு இருந்து 2,240 செல்போன்கள், ஒரு லேப்டாப், 10 டேப் லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பிரவீன்குமாரையும், அனுமன்ராமையையும் கைது செய்துள்ளோம். பிரவீன்குமார் மீது நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், கானத்தூர் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும் உள்ளன" என்றார்.

- எஸ்.மகேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close