Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நவம்பர், 4-ம் தேதி அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, நவம்பர் 4-ம் தேதி திருவாரூரில் பணியாளர் சங்கத்தினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அகில இந்திய பணியாளர் சங்க பொது சம்மேளனச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.

மேலும், மத்திய அரசு, ஊதியக்குழு அறிக்கையை அளித்த பின்னர், மாநில அரசு அதையே பின்பற்றி அறிவிக்க வேண்டும், மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களைப் போல், பழைய பென்ஷன் திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறைந்தபட்ச பென்ஷன், 3,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இவற்றை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில், நவம்பர் 23-ம் தேதி போராட்டம் நடத்தப்பட இருப்பதாகவும். பிப்ரவரி 11-ல் திருச்சியில் கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என்றும் பாலசுப்ரமணியன் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்