Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு அப்போலோ வருகை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர்  ரிச்சர்டு பீலே இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 33 நாட்களாக மருத்துவமனையில் உள்ள முதல்வருக்கு, லண்டனைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ரிச்சர்டு பீலே சிகிச்சை அளித்து வந்தார். மேலும், டெல்லி் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், சிங்கப்பூர் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த வாரம் லண்டன் சென்ற மருத்துவர் ரிச்சர்டு இன்று சென்னை திரும்பினார். அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ