Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் நிறைவு

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தனி அதிகாரிகள் பொறுப்பேற்பது குறித்து, இன்று மாலைக்குள் அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகளுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தலை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்பு பணிகளை கவனிக்கும் வகையில் தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான அவசர சட்டத்தை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார்.

இந்நிலையில் உள்ளாட்சி பிர‌திநிதிகளின் பதவிக் காலம் இன்றுடன் முடியும் நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுத் தனி அதிகாரிகள் நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

எடிட்டர் சாய்ஸ்