Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் இலங்கைத் துணை தூதரகம் முற்றுகை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மே 17 இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இரண்டு தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினர் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ