Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரவக்குறிச்சி அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி தேர்தல் ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குப் பிறகு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்ட அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதியில் 2 பேரும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக திமுக, அதிமுக கட்சிகளும், அரவக்குறிச்சி வேட்பாளர்கள் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிச்சாமி, தேர்தல் ஆணையரும் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை நவம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ