Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும், தஞ்சாவூரில் அதிமுக சார்பில் ரெங்கசாமியும், திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸும், திமுக சார்பில் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். அதன்படி, தஞ்சாவூரில்  வழக்கறிஞர் நல்லதுரையும், திருப்பரங்குன்றத்தில் மகாதேவனும்(வர்த்தகர்), அரவக்குறிச்சியில் அரவிந்த் குருசாமியும்(இயற்கை விவசாயி), புதுச்சேரி  நெல்லித்தோப்பில் ரவி அண்ணாமலை(வர்த்தகர்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

ஆ.விஜயனாந்த்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close