Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’முதல்வர் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்’: அப்போலோவில் குஷ்பு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.

கடந்த மாதம் 22-ம் தேதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  33 நாட்களாக மருத்துவமனையில் உள்ள முதல்வருக்கு, லண்டனைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ரிச்சர்டு பீலே சிகிச்சை அளித்து வந்தார். மேலும், டெல்லி் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், சிங்கப்பூர் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். முதல்வரின் உடல்நிலை பற்றி  மருத்துவர்களிடம் கேட்டறிய பல அரசியல் பிரமுகர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்.

முதல்வரின் உடல்நிலையை பற்றி கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். 

படம்: ஆ.முத்துக்குமார், கே.அஷோக் குமார்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close