Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காந்தியே நின்றாலும் காணாமல்தான் போவார்: அதிரும் அரவக்குறிச்சி தேர்தல்

பணம் பெரிதாக கருதப்படும் தற்போதைய சூழ்நிலையில் காந்தியே நின்றாலும்கூட டெபாசிட் இழப்பார் என்று அரவக்குறிச்சி திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார். 

பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கெனவே இந்த தொகுதிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் போட்டியிடத் தடை விதிக்கக்கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ராஜேந்திரன் சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ஜோதி, நேர்மையான சாதாரண பொதுஜனம் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாத நிலை நிலவுகிறது. பணம் பெரிதாக கருதப்படும் தற்போதைய சூழ்நிலையில் காந்தியே நின்றாலும்கூட டெபாசிட் இழப்பார் என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக கட்சிக்கும் மற்றும் அரவக்குறிச்சி அதிமுக, திமுக வேட்பாளர்கள் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ