Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 வாரத்தில் மதனை பிடித்துவிடுவோம்: உயர் நீதிமன்றத்தில் போலீஸ் உறுதி


நான்கு வாரத்தில் மதனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதியளித்துள்ளது.

பாரிவேந்தர் தொடர்பான வழக்கில், காவல் துறை ஏழாவது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.  பாரிவேந்தர் தரப்பு வழக்கறிஞர் வி.டி.கோபாலன், ரவிபச்சமுத்து மற்றும் பாரிவேந்தரை வழக்கில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மேலும், மதனின் தாயார் மற்றும் அவரின் மனைவியை கைது செய்து விசாரித்தால், மதன் இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்றும் கூறினார். மதன் காணாமல் போன விஷயத்தில் பாரிவேந்தர் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

காவல் துறை, நான்கு வாரத்தில் மதனைப் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம் என்று உறுதியளித்தனர். காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

எடிட்டர் சாய்ஸ்