Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பா? திருமாவளவன் பதில்

திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலகூட்டியக்க தலைவர்களிடம் மீண்டும் ஆலோசிக்கப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தை பாஜக, மக்கள் நலக்கூட்டணி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்தநிலையில், திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடிதம் எழுதி அனுப்பிருந்தார். இது குறித்து விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததற்கு திமுகவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலகூட்டியக்க தலைவர்களிடம் ஆலோசிக்கப்படும். அப்போது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படும். மக்கள் நலக்கூட்டியக்க முடிவை மீளாய்வு செய்ய வலியுறுத்துவோம். காவிரி பொதுச்பிரச்னை என்பதால் மீண்டும் தலைவர்களுடன் பேசுவோம். மேலும், தோழமைக்கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும். சிவகங்கையில் உள்ள வைகோவுடன் போனில் பேசுவோம். அக்டோபர் 6-ம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி காவிரி உரிமை மீட்பு பேரணியை நடத்த வேண்டும். 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி கிடப்பல் போடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close