Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி விளக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடு குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி,  ''அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 

அரவக்குறிச்சியில் 245, தஞ்சாவூரில் 276 பேரும், திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அரவக்குறிச்சியில் 980 பேர், தஞ்சாவூரில் 1104 பேர், திருப்பரங்குன்றத்தில் 1164 பேர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட இருக்கிறது.

 இதற்கு முன்பு பதற்றமான வாச்குசாவடிகளில் மட்டுமே வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close