Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2-வது முறையாக அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார் ஓபிஎஸ்

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 33 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தையும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

முதல்வரின் பொறுப்புகள் ஒப்படைத்த பின்னர் கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார். அப்போது, காவிரி விவகாரம், உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2-வது முறையாக அமைச்சரவை கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம், உதய் திட்டம், புதிய கல்விக் கொள்கை, மீனவர்கள் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ