Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’திமுக.வின் நயவஞ்சகமான வேலை’: வைகோ சாடல்

காவிரி விவகாரத்தில் திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் நயவஞ்சகமான வேலை என மதிமுக பொதுச்செயலர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த வைகோ, “காவிரி நதிநீர் பிரச்னையில், மத்திய அமைச்சரவையில் இருந்தபோது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்வது நயவஞ்சகமான வேலை. காவிரி பிரச்னையில் உண்மையுடன் செயல்படுபவர்களுக்கு கண்டிப்பாக ஆதரவாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அண்மையில் வைகோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close