Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா நலம்பெற வேண்டி சிறப்பு யாகம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சென்னை நீலாங்கரையில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அ.தி.மு.க. மீனவரணி மாநில செயலாளர் எம்.சி.முனுசாமி தலைமையில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மேலபுதுப்பேட்டை கைலாசநாதர் திருக்கோயிலில், கோமாதா பூஜையும் சிறப்பு யாகமும் நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி அ.தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற இப்பூஜையில், அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 34-வது நாளாக இன்று வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ