Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது 

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தை பாஜக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, அதிமுக, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகள் புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா, மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ