Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இன்று வராதவர்கள் நாளை வருவார்கள்'- அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என நம்புகிறேன்" என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தை பாஜக, மக்கள் நலக்கூட்டணி, அதிமுக, பாமக, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகள் புறக்கணித்துள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவே அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக அரசு அல்லது எந்தக்கட்சி கூட்டியிருந்தாலும் திமுக பங்கேற்றிருக்கும். ஒற்றுமையோடு ஒன்றிணைவதில் ஒரு சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள் என நம்புகிறேன்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close