Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போதை ஊசியுடன் கல்லூரி மாணவர்கள்: குழித்துறை அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ரயில் நிலையத்தில் போதை ஊசி போட்ட கல்லூரி மாணவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

குழித்துறையில் உள்ள கழிவறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 மாணவர்கள் சுற்றி வருவதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். அப்போது, மாணவர்கள் போதை ஊசியை ஒருவருக்கொருவர் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, மாணவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது, 3 பேரும் காவல்துறை பிடியில் இருந்து தப்பியோடி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ