Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு: கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் மற்றும் காவிரி பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் அறிக்கைகள் தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை பதிவு செய்ய வேண்டும் ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close