Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் சூட்டப்பட்டது!

பசும்பொன் தேவர் குரு பூஜை விழா வரும் 28-ம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தங்க கவசம் இன்று சூட்டப்பட்டது. இதில் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு காரணத்துக்காக இந்த தங்க கிரீடமானது, விழா முடிந்தவுடன் மதுரையில் உள்ள வங்கி பெட்டகத்தில் வைத்து வழக்கம்போல் பாதுகாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவுக்காக, பல்வேறு முன்னேற்பாடுகள் 
செய்யப்பட்டு வருகின்றன.

எடிட்டர் சாய்ஸ்