Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளநிலை, உண்மை நிலை தெரியும்: திருமாவுக்கு ஸ்டாலின் பதில் 

திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக இன்று கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக, மக்கள் நலக்கூட்டணி, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காதது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், திருமாவளவனின் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள மு.க.ஸ்டாலின், தங்களின் உள்ளத்தின் நிலை, உண்மை நிலையை புரிந்து கொண்டேன். காவிரி விவகாரத்தை தேர்தலுடன் முடிச்சு போட வேண்டாம் என்பது வரவேற்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ