Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று தொடங்குகிறது 3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அடுத்த மாதம் 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது, வேட்புமனுக்களை அளிக்க நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற நவம்பர் 5-ம் தேதியும் கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 347 வாக்காளர்களும், தஞ்சாவூரில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 516  வாக்காளர்களும், திருப்பரங்குன்றத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close