Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக எம்.எல்.ஏவின்  15 வயதுக்குட்பட்ட மகன்கள் ஓட்டிய பைக்கால் விபத்து

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சிறுப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்குசாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜேஷ். இவர் திங்கள்கிழமை காலை தனது பைக்கில் மண்ணச்சநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனின் 15 வயதுக்குட்பட்ட மகன்கள் இருவர் பள்ளிக்கூடத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து ராஜேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. சிறுவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

'பலத்த காயம் அடைந்த தனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், தனக்கும் தன் குடும்பத்தாருக்கு ஏதாவது ஒன்றானால்  எம்.எல்.ஏ பரமேஸ்வரிதான் காரணம்' என குற்றம்சாட்டுகிறார் ராஜேஷ்.

- சி.ய.ஆனந்தகுமார் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ