Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிவகாசி விபத்து - கொந்தளிக்கும் கோர்ட்

சிவகாசியில் பட்டாசு வெடிவிபத்தை சூமோட்டோ வழக்காக எடுத்துக்கொண்ட சென்னை  உயர் நீதிமன்ற மதுரை கிளை, நேற்று மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டு அதிகாரி யாதவ், தமிழக அதிகாரி சுந்தரேசன் ஆகிய இருவரையும் நேரில் வரழைத்து பல கேள்விகளை முன்வைத்தது.


'2005-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் பல்வேறு வெடி விபத்துகள் நடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்த விபத்துகளுக்கு காரணமான நபர்கள் மீது இதுவரை கடும் நடவடிக்கைகள் பாயவில்லை. முறையான வழக்கும் போடவில்லை. பெயருக்கு வழக்கு போட்டாலும் முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த நீதிமன்றம் ஏன் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கூடாது என்று கருதுகிறது.

 


மேலும் வெடி விபத்துகளில் பலியான ஊழியர்களின் குடும்பங்களுக்கு சரியான இழப்பீடு தொகை வழங்கப்படவும் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டே அவர்களின் பணிகளில் இருந்து விலகிக்கொள்கிறீர்கள்.


2013-ல் கும்பகோணம் அருகே நடந்த வெடி விபத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று வழக்கும் இருக்கிறது. ஒரு சிலருக்கு சொற்ப தொகையாக உழவர் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கி இருப்பதாக அரசு கணக்கு காட்டுகிறது. ஆனால் அதுவும் கண் துடைப்பு போல நடந்திருப்பது இங்கு அப்பட்டாமாக தெரிகிறது. இதுவரை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என்ன மாதிரியான இழப்பீடுகள் கொடுக்கப்பட்டது? இழப்பீடு குறித்த திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

 

இல்லையென்றால் நீதிமன்றமே தலையிட்டு இடைக்கால நிவாரணத் தொகையை வழங்கவேண்டிய சூழல் வரும் என்று கடுமையாக எச்சரித்த நீதிபதிகள் , திருச்சியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு இல்லாத இடங்களில் பட்டாசுகள் விற்பனை செய்வதாக வந்த மனுவையும் உடன் இணைத்து விசாரித்த நீதிமன்றம்  நாளை திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியையும், விருதுநகர் எஸ்.பியையும்  நேரில் ஆஜர் ஆகச்சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார்கள்.


- சண்.சரவணக்குமார் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ