Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

7000 பாம்புகளை பிடித்தவர் நல்லபாம்பு கடித்து பலி!

பாம்பு பிடிப்பதில் வல்லவரான திருவாரூரை சேர்ந்த மோகன் என்பவர் நல்லபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் மோட்டார் ரீவைண்டிங் தொழில் செய்யும் மோகன் பாம்பு பிடிப்பதில் வல்லவர். குடியிருப்புகளில் புகும் சுமார் 7000 பாம்புகளை துன்புறுத்தாமல் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

நேற்று ஒரு பெண்ணின் வீட்டில் புகுந்த நல்லபாம்மை பிடித்தபோது மோகனை கொத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோகனுக்கு மனைவியும், திருமண வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.

-ராகவன், படம்: சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ