Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி கைது

சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தை முற்றுகையிட்ட தொல்.திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி, மல்லை சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் 2 பேர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதிமுகவை சேர்ந்த மல்லை சத்யா ஆகியோர் தலைமையில்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணை தூதரகம் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  

படம்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ