Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய அளவு சைக்கிள் போட்டிக்கு தயாராகும் சென்னை பெண்

சென்னையைச் சேர்ந்த லட்சுமி தங்கதுரை, ராமேஸ்வரத்தில் நடந்த மாநில அளவிலான 40 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். தற்போது, அடுத்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளார்.


முன்னாள் பொறியியல் மாணவியான லட்சுமி, தற்போது 'டெரகோட்டா ஜுவல்லரி' என்று சொல்லப்படும் சுடுமண் நகைகளை செய்து இணையம் வழியாக விற்று வருகிறார். கடந்த ஒரு வருடமாகத்தான் சைக்கிளிங் செய்து வருவதாகக் கூறுகிறார் லட்சுமி. இதுபற்றி அவர் கூறுகையில்,'குறைந்த காலமாக இருந்தாலும் முறையான பயிற்சி மூலம் ராமேஸ்வரத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றேன். அந்த போட்டியில் வென்ற பிறகுதான், சைக்கிளிங்கை, தொழில்முறையில் தொடரலாமா என்ற எண்ணம் வந்துள்ளது.' என்றார் இந்த சாம்பியன். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close