Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார் ரேஸர் விகாஸ் ஆனந்துக்கு 27 லட்சம் அபராதம்

சென்னையில், குடி போதையில் போர்சே காரை ஓட்டி, ஆட்டோ டிரைவரை பலி வாங்கிய விகாஸ் ஆனந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை  ஜாமீன் வழங்கியது.

கார் ரேஸ் வீரரான விகாஸ், சென்னை கத்தீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார். இந்த விபத்தில் 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் பலியானார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜாமின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விகாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையாக 27.5 லட்சம் ரூபாயை செலுத்த உத்தரவிட்டது. விபத்தில் சேதமடைந்த 10 ஆட்டோக்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கவேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை நவ.11 ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close