Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவுக்கு 261 ரன் வெற்றி இலக்கு 

ராஞ்சியில் நடந்து வரும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 261 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் குப்தில் 72 ரன்கள் அடித்தார். லதம் (39), வில்லியம்சன் (41), டெய்லர் (34) ஆகியோர் ரன் அடித்தனர்.

இந்தியா தரப்பில் மிஸ்ரா 2 விக்கெட்டும், யாதவ், குல்கர்னி, பாண்டியா, பாட்டீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத்  தொடர்ந்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்க உள்ளது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ரஹானே களம் இறங்குகின்றனர். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ