Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்- மு.க.ஸ்டாலின் 

மதிப்பீட்டுக்குழு, பொதுக் கணக்குக்குழு உள்ளிட்ட 12 குழுக்களை அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 14-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து   அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்புகளுடனும் மற்றும் பல்வேறு கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை வழங்கினார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்தார். அவர் தனது அறைக்குச் சென்றார். அவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசப்போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மதிப்பீட்டுக்குழு, பொதுக் கணக்குக்குழு உள்ளிட்ட 12 குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. குழுக்களை அமைக்கக்கோரும் மனுவை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கியுள்ளோம். குழுக்களை அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். குழுக்களை அமைக்காதது தொடர்பாக ஆளுநரையும் சந்தித்து பேசுவோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்