Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொளத்தூர் மணி சென்ற கார் மோதி தம்பதி உயிரிழப்பு

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்ற கார் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேட்டூர் அருகே சாத்தப்பாடி என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

எடிட்டர் சாய்ஸ்