Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கசமுசா கணவரைக் காட்டிக் கொடுத்த பச்சைக் கிளி!

குவைத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருக்கும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பை கெட்டிக்கார கிளியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார். இந்த செய்தி தீயாகப் பரவியதால் அந்தக் கிளிக்கு உலகம் முழுக்க டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம். தனது கணவருக்கும், வீட்டில் வேலைபார்க்கும் பணிப் பெண்ணுக்கும் தகாத உறவு இருப்பதாக அவர் கருதினார். எனினும், அதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் அவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், காலையில் வேலைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். இதனால், தனது சந்தேகத்தை எப்படி உறுதி செய்வது என தவித்துள்ளார் அப்பெண். இந்த நிலையில், அவர் வீட்டில்  ஆசையாக வளர்த்து வந்த பச்சைக்கிளி, உளவாளியாக வேலைபார்த்து அவருக்கு உதவியுள்ளது.

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், கணவரும் பணிப்பெண்ணும் பேசிய அந்தரங்க வார்த்தைகளை பச்சைக்கிளி அமைதியாகக் கேட்டு, தனது எஜமானர் பெண்ணிடம் பேசிக் காட்டியுள்ளது. கிளியின் வார்த்தைகளைக் கேட்டு கொதித்துப் போன அவர், ஒருநாள் அலுவலகத்தில் இருந்து திடீரென்று சீக்கிரமாக வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, கணவரும், வீட்டுப் பணிப் பெண்ணும் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து உடனடியாக கணவர் மீது, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 'கிளியின் சாட்சி நம்பத் தகுந்ததாக நீதிமன்றத்தில் ஏற்கப்படாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்டுகூட கிளி பேசியிருக்கலாம் என எதிர்தரப்பு வாதிட்டால் வழக்கு எடுபடாது' என போலீஸார் கூறியதுடன், வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனால் கடுமையான தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார் அந்த கணவர். 

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்!

- ஆ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close