Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா நலம்பெற கட்சியினர் பால்குடம் எடுத்து வழிபாடு!

தமிழக முதல்வர் பூரண உடல் நலம் பெற வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 5000 பேர் பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். 

முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து, காமாட்சி அம்மன் கோயிலுக்கு சுமார் 5000 பெண்கள் நான்கு ராஜ வீதி வழியாக பால் குடம் எடுத்து வந்தனர். பின்னர் பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.  

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், அதிமுக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

- ஜெயவேல்



 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close