Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஏஎஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி மீது வழக்கு

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இந்து மதத்தை அவமதித்து பேசியதாகக் கூறி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி பங்கேற்றார். அப்போது, நடந்த விவாதத்தில் ராமரை அவமதித்து பேசியதாக கிருஸ்துதாஸ் காந்தி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதோடு இல்லாமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட இந்துமுன்னணிச் செயலாளர் தங்கமனோகரன், வள்ளியூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதன் பேரில் பழவூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சிந்தாதரிபேட்டை காவல்நிலையத்தில் கிருஸ்துதாஸ் காந்தி மீது இந்து முன்னணியின் மாநில அலுவலக செயலாளர் பத்மராஜன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 295(ஏ), 153(ஏ)(1)(ஏ) ஆகிய பிரிவின் கீழ் கிருஸ்துதாஸ் காந்தி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்