Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாயமான மரகத லிங்கம் வழக்கு: பழைய குற்றவாளிகளின் கைரேகைகள் ஆய்வு

 

திருக்குவளையில் பலகோடி ரூபாய் மதிப்பில் காணாமல்போன மரகதலிங்கம் வழக்கில், பழைய குற்றவாளிகள் கண்காணிப்பட்டு வந்த நிலையில் அவர்களின் கைரேகையை போலீசார் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த 7 கோயில்களில் ஏற்கெனவே இரண்டு மரகதலிங்கம் களவு போன நிலையில், மூன்றாவது முறையாக திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், கருணாநிதி வீட்டின் எதிர்புறத்தில் உள்ள கோயிலிலேயே மரகதலிங்கம் திருடப்பட்டிருப்பது ஆன்மீக வட்டாரத்தில், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு, 'உளி கொண்டு செதுக்கப்படாத இறைவன் அருளியதாகச் சொல்லப்படும்' புராதான பொக்கிஷமான மரகதலிங்கம் இருக்கிறது. அதற்கு தினமும் காலை, மாலை அபிஷேக பூஜை நடப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி காலை பூஜை செய்துவிட்டு சென்ற அர்ச்சகர் கணேச குருக்கள், அன்று மாலை 6 மணிக்கு மெய்காவலர் ரவிச்சந்திரனுடன் மீண்டும் பூஜை செய்ய வந்தபோது மரகதலிங்கம் இருந்த பாதுகாப்பு பெட்டகம் திறந்து கிடந்திருக்கிறது. மேலும், பூட்டு உடைக்கப்பட்டு தொங்கிய நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் காணாமல்போனது தெரியவந்தது.

"இந்த வழக்கில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கோயில்களில் ஏற்கெனவே காணாமல்போன சாமி சிலைகள் வழக்கில் உள்ள பழைய குற்றவாளிகளின் பெயர்களை வைத்து, அவர்களுடைய கைரேகையுடன் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தற்போது நவீன முறையில் திருடும் குற்றவாளிகளின் பெயர்கள் ஒரு பக்கம் திரட்டப்பட்டு வருவதாகவும், இன்னொரு பக்கம் சாமி சிலை குற்ற வழக்கில் ஏற்கெனவே சிறைக்கு சென்றுவிட்டுத் திரும்பி உள்ளவர்களில் குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. கூடிய விரைவில், குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு மரகதலிங்கம் மீட்கப்படும்" என்று நாகை மாவட்ட துணை கண்காணிப்பாளர் அன்பு தெரிவித்துள்ளார்.

சுவாமி சிலை கொள்ளைச் சம்பவம் குறித்து தஞ்சாவூரில் உள்ள இந்துசமய அறநிலையைத் துறை இணை ஆணையர் குமரகுருவிடம் கேட்டபோது;“பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தருமபுர ஆதீன மடத்துக்குப் பலமுறை நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் எதையும் பின்பற்றவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உடைமைகளை அவர்கள்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார் தடாலடியாக.

தருமபுர ஆதீன மடத்தின் மேலாளர் மோகனிடம் இதுதொடர்பாக பேசியபோது, “எல்லாம் கண்காணிப்பாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய கோயிலில் திருட்டுப்பய எங்க, எப்படி பதுங்கி இருப்பான்னு யாருக்குத் தெரியும். காணாப்போச்சு கம்ப்லைன்ட் கொடுத்திருக்கிறோம், போலீஸ் விசாரிச்சிகிட்டு இருக்கு” என்றார்.

"பாதுகாப்பு பெட்டியின் லாக்கர் பழுதாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதனை பழுது நீக்கனும், இல்லைன்னா புதுசா வாங்கனும் என்று சூப்பிரண்ட்கிட்ட சொல்லிட்டேன். ஏதே தெய்வ குற்றத்தில இப்படி நடந்து போச்சு” என்று அப்பாவியாகச் சொன்னார் கோயிலின் மெய்க்காவலரான ரவிச்சந்திரன்.

கோயில் சுவரில் நந்தவன மரங்கள் படர்ந்துள்ளன. திருடர்கள் இதன் வழியாக கோயிலுக்குள் எளிதாக நுழைய முடியும். கோயிலுக்கு பெரும்பாலும் பக்தர்கள் வருகை குறைவு என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாதாரண மார்வாடி கடையில்கூட பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வசதி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகள் உள்ள கோயில்கள் பொருத்தப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. முக்கியமாக, பலகோடி ரூபாய் மதிப்பலான மரகதலிங்கம் வைத்து பாதுகாக்கப்பட்ட பெட்டிக்கு, வெறும் 15 ரூபாய் மதிப்பிலான பூட்டு போடப்பட்டிருந்தாக வெளியான செய்தி, முற்றிலும் அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் தருவதாக இருக்கிறது. 

- ரா.வளன், மு. இராகவன் படங்கள் : சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ