Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உணவுப் பாதுகாப்புச்சட்டம் நவம்பர் 1ம் தேதி அமலாகிறது! 

 

தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1-ம் தேதி முதல்  அமலாகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பொது விநியோகத்திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அர‌சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவி‌க்‌கப்பட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆயிரத்து 193 கோடியே 30 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும், இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி,  3 முதல் 10 நப‌ர் வரை கொண்ட குடும்பங்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இனி அந்த அளவு அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி 5 ‌ உறுப்பினர்கள் உள்ள குடும்பத்துக்கு இனி 25 கிலோ அரிசியும், 6 பேர் கொண்ட குடும்பங்களுக்கு இனி 30 கிலோ அரிசியும் 7 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், 8 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 40 கிலோ அரிசியும், 9 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 45 கிலோ அரிசியும், 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள‌து.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close