Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாக்டர்கள் அனுமதிக்க மறுப்பு: அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஒருவர் உயிரிழந்த சோகம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதி என்பவர் உயிரிழந்துள்ளார். உள்நோயாளியாக டாக்டர்கள் அனுமதிக்காததால் மதி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மூங்கில்குடியை சேர்ந்தவர் மதி. நெஞ்சுவலி காரணமாக இவர் நேற்றிரவு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு  ஊசி போட்டதோடு, உள்நோயாளியாக அனுமதிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் ஊருக்கு செல்ல பேருந்து இல்லை.

இதனால் மதி, மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். காலையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், மதி இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, மருத்துவமனையில் உள்நோயாளியாக டாக்டர்கள் அனுமதிக்காதால் மதி இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close