Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மருத்துவக் கல்விக் கட்டணம் குறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
மருத்துவப் படிப்புக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மருத்துவப் படிப்புகளுக்கு 5 லட்சத்து 54 ஆயிரத்து 370 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாக, தமிழகத்தைச் சேர்ந்த 450 மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2013-ம் ஆண்டு  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை, தமிழக அரசு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ