Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராம்குமாரை கண்காணித்த புழல் சிறை அதிகாரி திடீர் சஸ்பெண்ட்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை கண்காணித்து வந்த சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் இன்று திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அப்போது, ராம்குமாரை, புழல் இரண்டாவது சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் கவனித்து வந்தார். இந்த நிலையில், முறைகேடு புகார் அன்பழகனை இன்று சிறைத்துறை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

கோவையில் ஜெயிலராக அன்பழகன் பணியாற்றியபோது உணவுப்பொருட்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். புழல் சிறையில் இரண்டாம் சிறையின் கண்காணிப்பாளராக அன்பழகன் இருந்து வந்தார். இந்த மாதத்துடன் அன்பழகன் ஓய்வு பெறும் நிலையில், தமிழக அரசு திடீரென அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close