Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட சாமியாரால் பரபரப்பு 

முதல்வர் ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் கல்கி பகவான் என்று அழைக்கப்படும் விஜயகுமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அ.தி.மு.கவினர் மற்றும் பக்தர்களின் வருகையால் அப்போலோ மருத்துவமனை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த நேமம் கிராமத்தில் ஆசிரமம் நடத்திய விஜயகுமார் என்ற சாமியாருக்கு நேற்றிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யார் இந்த விஜயகுமார்?

சென்னை அருகே பூந்தமல்லி அருகே உள்ளது நேமம் கிராமம். இந்த கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை நடத்தி வந்தவர் விஜயகுமார். இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவதுண்டு. கல்கி பகவான் என்று கூறியதாகவும் விஜயகுமார் மீது சர்ச்சை எழுந்தது. விஜயகுமாரின் ஒவ்வொரு செயல்களும் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் பிரபலமடைந்ததார். இவர் மீது திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விஜயகுமாருக்கு நேற்றிரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகுமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது பக்தர்கள் அங்கு குவியத் தொடங்கினர். ஏற்கெனவே அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதால் அங்கு அ.தி.மு.கவினர் குவிந்துள்ளனர். தற்போது சாமியார் விஜயகுமாரும் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்போலோ மருத்துவமனை பகுதி மேலும் பரபரப்பாகி இருக்கிறது. 

- எஸ்.மகேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ