Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: அமைச்சர் தகவல்

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், இது குறித்து மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், போக்குவரத்துத்துறை இயக்குநர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தநிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்றும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close