Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபத்தில் சிக்கியவர்களுக்கு தைரியமாக உதவலாம்! போலீஸ் தொல்லை... இனி இல்லை...!

‘சாலை விபத்துகள்’, நம்முடைய அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஒவ்வொருநாளும் நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் சாலை விபத்துகளின் அபரிமிதமான எண்ணிக்கை நம்மை அந்த மனநிலைக்கு மாற்றி உள்ளது. அதிக வேகம், குடி போதை, போக்குவரத்து விதிகளை மீறுவது, மோசமான வாகனங்கள், மோசமான சாலைகள் என ஒவ்வொரு சாலைவிபத்து மரணத்துக்கும் ஒவ்வொரு காரணம். இவற்றில்  பரிதாபமான காரணம் என ஒன்றைப் பட்டியலிடலாம். விபத்தில் சிக்கியவர்,  உதவ ஆள் இல்லாமல், உயிரை விட நேர்வதுதான் பரிதாபமான காரணம். பரபரப்பான நகர வீதியில் விபத்து நடந்தாலும், உதவ ஒரு ஆள் வராது. அதற்கு காரணம், உதவ நினைப்பவருக்கு பின்னால் வரும் தொல்லைகள். உதவி செய்தவரை விசாரிக்க போலீஸ் வரும்; போலீஸ் விசாரணையோடு போகாது; சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து அழைக்கும். இப்படிப்பட்ட தொடர்ச்சியான தொல்லைகளைத் தவிர்க்க, உதவி செய்ய மனமிருந்தாலும்... நேரம் இருந்தாலும்... அமைதியாக ஒதுங்கிக் செல்வது உத்தமம்” என நினைத்து பலரும் விலகிச் சென்றுவிடுவார்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர், உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும், சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குப் போக முடியாததால் பரிதாபமாக உயிரை விடுவார். 

இந்த நிலையை மாற்ற, கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், “விபத்து சமயங்களில் உதவியவர்களை அலைக்கழிக்கக்கூடாது. அதற்கேற்றவாறு மத்திய-மாநில அரசுகள் வழிமுறைகளை உருவாக்கி விதிமுறைகளை மாற்ற வேண்டும்” என்றது. அதைப் பின்பற்றி மத்திய அரசு சில வழிகாட்டுதல் முறைகளை வகுத்தது. அதையடுத்து, தற்போது தமிழக அரசும் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள்.

 1.    விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருபவர்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது. தேவைப்பட்டால், அவர்களுடைய முகவரியை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். 

 2.    விபத்தில் சிக்கியவர்களுக்கு, உதவி செய்தவர்களுக்கு அரசாங்கம் தக்க சன்மானம் வழங்கும். இது, பொதுமக்கள் மத்தியில், விபத்து நேரங்களில் உதவும் எண்ணத்தை வளர்க்கும். 

 3.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள், அந்த விபத்து தொடர்பான எந்த ஒரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக மாட்டார்கள்.

 4.    காவல் நிலையம், விபத்து சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு, விபத்து தொடர்பான விவரங்களை தெரிவிக்கும் நபரின் பெயர் உள்ளிட்ட சொந்த விவரங்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

 5.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுபவர்கள் சொந்த விவரம், தொடர்பு விவரங்களை அளிப்பது அவர்களது விருப்பத்தை பொறுத்தது. மருத்துவத் துறை விண்ணப்பங்களில், அதை நிரப்பச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. 

 6.    உதவிசெய்பவர்களின் பெயர், சொந்த விவரங்களைத் தெரிவிக்க கட்டாயப்படுத்தும் அலுவலர்கள் மீது ஒழுங்கு மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

 7.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் தாமாக சாட்சி சொல்ல விரும்பும்போது, காவல்துறை அவரிடம் ஒருமுறை மட்டும் விசாரிக்கலாம். விசாரணையில் துன்புறுத்தலோ கட்டாயப்படுத்தலோ இருக்கக்கூடாது.

 8.    விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய நபர், காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாத பட்சத்தில், அவரிடம் இருந்து அனுமதி மற்றும் பதிவு செய்வதற்கான செலவினத்தை செலுத்துமாறு தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள் கேட்கக் கூடாது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். 

 9.    சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையில், மருத்துவர் அக்கறை செலுத்தாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 10.  அனைத்து மருத்துவமனைகளின் நுழைவு வாயிலிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவியவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வைப்புத்தொகை செலுத்த வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்தி அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும்.

11.    விபத்து இடர்ப்பாடுகளில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்கள் கேட்டால், அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம் மற்றும் நாள் தொடர்பான அறிக்கையை வழங்கலாம். இதற்கு மாநில அரசு நிலையான படிவம் தயாரித்து அனைத்து மருத்துவ மனைகளுக்கும் வழங்க வேண்டும். 

 12.    அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளும் இந்த நடைமுறைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கத் தவறும், விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 - ஜோ.ஸ்டாலின்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ