Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடி விபத்தால் தரைமட்டமான வீடுகள்!

தமிழகத்தில் இன்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசமானது.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் மக்கான் தெருவில் வெடிக்கப்பட்ட பட்டாசு தீப்பொறியால் 3 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அகதிகள் முகாம் உள்ளது. இங்கு பட்டாசு வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 குடிசைகள் வீடுகள் எரிந்தது.

திருவாரூர் மாவட்டம், புலிவலம் பகுதியில் வெடி வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஜாபர்பேக் தெருவில் பட்டாசு தீப்பொறியால் குடிசைகள் எரிந்து சேதம் அடைந்தது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சென்னிவனத்தில் பட்டாசு தீப்பொறியால் 3 வீடுகள் எரிந்து நாசமானது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ