Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புழல் சிறைக்கு முதலிடம் கொடுக்கலாம்: ராமதாஸ் ட்வீட்

தற்கொலைக்கு ஏற்ற பகுதிகளில் புழல் சிறைக்கு முதலிடம் கொடுத்து விடலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் இன்று பதிவு செய்துள்ள ட்வீட்:

சென்னை புழல்சிறையில் மின்சாரக்கம்பியை கடித்து தற்கொலைக்கு கைதி முயற்சி: தற்கொலைக்கு ஏற்ற பகுதிகளில் புழல் சிறைக்கு முதலிடம் கொடுத்து விடலாம்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: தறுதலைகளின் ஒருதலைக் காதலுக்கு முடிவுகட்ட கடுமையான நடவடிக்கை தேவை!

நீதித்துறையை ஒழிக்க மத்திய அரசு முயலக்கூடாது: உச்சநீதிமன்றம் - ஜனநாயகத்தின் தூண்கள்  ஒன்றையொன்று தாங்க வேண்டும்... தாக்கக் கூடாது!

அதிக கட்டணம் வசூலித்ததாக 15 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அப்படின்னா 1500 பேருந்துகள் மீது நடவடிக்கை இல்லைன்னு அர்த்தம்!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ