Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் காங்கிரஸுக்கு விசிக ஆதரவு: திருமாவளவன் பிரசாரம்

நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நாராயணசாமியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளில் திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகள் களம் இறங்கியுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியில் தேமுதிக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் நலக்கூட்டணி அறிவித்துவிட்டது.

இந்த நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை இன்று சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், ''புதுச்சேரியில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்தவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தங்கள் நிலைபாட்டை இடதுசாரிகளிடம் கூறியபோது எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவு தமிழகத்துக்குப் பொருந்தாது. முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து கட்சித் தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்வார்'' என்றார். 

படம்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ