Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

"ஈரப்பதம் நிறைந்த காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த பருவமழையை தொடர்ந்து 3 மாதங்களுக்கு எதிர்பார்க்கலாம் என்றும், இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியுள்ளார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும், தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள தமிழக கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும்" அவர் கூறியுள்ளார். 

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும், பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ