Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குஷ்பு கருத்தால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன்

பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், தவறான கருத்துகளை அவர் கேட்டிருப்பார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணித்துள்ளது. ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ''மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடம் முடிவை தெரிவித்தே விடுதலைசிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்தது. மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை புதுச்சேரியில் உள்ளது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மையின மக்களை பாதிக்கும் என்பதால்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தல்களில் ஆதாயம் பெறவே பாஜக பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்கிறது. பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. தவறான கருத்துகளை குஷ்பு கேட்டிருப்பார்.

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பணியில் வைகோ சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் முடிவின்படி செயல்படுவோம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் மக்கள் நலக்கூட்டணியிலுள்ள கட்சிகள் அவர்களாகவே  முடிவு எடுத்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாராயணசாமி தொடர்ந்து முதல்வராக இருக்க வேண்டும் என்பதாலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ