Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அப்போலோவில் சரோஜா தேவி

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என்று நடிகை சரோஜாதேவி கூறினார்.

உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ வருகை தந்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக நடிகை சரோஜாதேவி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார். ஜெயலலிதா பல சாதனைகளை படைத்த பெண்மணி என்றார். 

படம்: கிரண்குமார் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ