Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீடு திரும்பியதும் முதல்வரை பார்ப்பேன்: அப்போலோவில் கபடி சாம்பியன்

உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற  தமிழக வீரர்  தர்மராஜ் சேரலாதன், முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த மருத்துவர்களிடம், முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

பின்னர் அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேரலாதன், "உலக கோப்பை கபடி போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தமிழக முதலமைச்சரைப் பார்க்க வந்ததாகவும், உலக கோப்பை கபடி போட்டியில் வெற்றி பெற்ற பதக்கத்தை தமிழக முதல்வருக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதல்வர் ஜெயலலிதா, விளையாட்டுக்காக அதிக உதவிகள் செய்துள்ளதாகவும், முதல்வர் வீடு திரும்பிய பிறகு பார்க்க ஆசைப்படுவதாகவும் சேரலாதன் கூறினார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ