Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மவுலிவாக்கத்தில் நாளை 11 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிப்பு: மின்தடை இடங்கள் அறிவிப்பு

மவுலிவாக்கத்தில் நாளை 11 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்படுவதையொட்டி பிற்பகல் 12 முதல் மின்சாரம் தடை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி சென்னை மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடத்தை இடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வு குழுவினர் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், கட்டடத்தை இடிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதைத் தாெடர்ந்து கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கட்டடம் இடிக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில், மவுலிவாக்கம் 11 மாடி கட்டடத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கட்டடம் நாளை மாலை இடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மவுலிவாக்கம் சுற்றுபுறப் பகுதிகளில் நாளை பிற்பகல் 12 முதல் கட்டடத்தை இடித்து முடிக்கும் வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார். 

போரூர்- குன்றத்தூர் ரோடு, மவுலிவாக்கம், மாதாநகர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தொழிற்சாலைகள் உள்ள பழனி நகரிலும் மின் தடை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close